கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி மகளிர் அணி சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.



பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி காரமடையில் உள்ள ஆர்.வி. கல்லூரியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, 4 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில் 42 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. நேற்று முதல் 2 நாட்கள் நடைபெற்ற பெண்களுக்கான செஸ் போட்டியில் 12 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரியை வீழ்த்தி பி.எஸ்.ஜி. கலை கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெள்ளாலர் பெண்கள் கல்லூரி மற்றும் நிர்மலா பெண்கள் கல்லூரி முறையே 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடித்தன. 

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவில் 5 சுற்றுகள் முடிந்த நிலையில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலா கல்லூரி அணிகள் முன்னிலையில் உள்ளன. எஞ்சிய சுற்றுப் போட்டிகள் நாளை நடைபெற இருக்கிறது. 



முதல் இரண்டு நாட்களில் பெண்களுக்கான போட்டிகளும், 27 மற்றும் 28-ம் தேதிகளில் ஆண்களுக்கான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. முதல்நாளான இன்று நடந்த 6 சுற்றுகளின் முடிவில், நிலையில், பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது.

Newsletter