பாரதியார் பல்கலைக்கழக கால்பந்து போட்டியில் எளிதில் வெற்றி பெற்றது பி.எஸ்.ஜி., அணி

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கால்பந்து போட்டியில் வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லூரியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பி.எஸ்.ஜி., கல்லூரி அணி எளிதில் வெற்றி பெற்றது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கால்பந்து போட்டியில் வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லூரியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பி.எஸ்.ஜி., கல்லூரி அணி எளிதில் வெற்றி பெற்றது. 

பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரின் ஒரு போட்டியில் வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி., கல்லூரி அணிகள் மோதின. இதில், ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய பி.எஸ்.ஜி. அணியின் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கோல் மழை பொழிந்தனர். à®ªà®¤à®¿à®²à¯à®•்கு, வி.எல்.பி., கல்லூரி அணியின் வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில், 4-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., அணி எளிதில் வெற்றி பெற்றது. 



இதேபோல, மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் கூடலூரைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வீழ்த்தியது. ராபின் ரவுண்ட் முறையில் நடத்தப்படும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றில் மோதவுள்ளன. 

Newsletter