கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் வி.எல்.பி., கல்லூரி அணி சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் வி.எல்.பி., கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் வி.எல்.பி., கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.



பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி காரமடையில் உள்ள ஆர்.வி. கல்லூரியில் நடைபெற்றது. இதில், 42 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிச் சுற்றின் முடிவில் வி.எல்.பி. கல்லூரி அணியும், பி.எஸ்.ஜி., கல்லூரி அணியும்5 வெற்றிகளுடன் சமநிலை வகித்து வந்தது. இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் 20 புள்ளிகளுடன் வி.எல்.பி., அணி கோப்பையை தன்வசப்படுத்தியது. பி.எஸ்.ஜி., கல்லூரி அணி 2-வது இடத்தையே பிடித்தது. 



3-வது இடத்தை பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜ கல்லூரியும், 4-வது இடத்தை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பிடித்தது. அதோடு, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணியின் ஆர். ரதிஸ் மற்றும் ஸ்ரீராம் கே செந்தில் ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். கொங்குநாடு கல்லூரியின் மனோரஞ்சித் 33 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 



வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு ஆர்.வி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ராமகிருஷ்ணன் மற்றும் அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சி.என். ரூபா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். 

Newsletter