பாரதியார் பல்கலைக்கழக கால்பந்து போட்டி : பி.எஸ்.ஜி., கல்லூரி அணிக்கு 2-வது வெற்றி

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி 2-வது வெற்றியை பெற்றது.

கோவை : à®ªà®¾à®°à®¤à®¿à®¯à®¾à®°à¯ பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி 2-வது வெற்றியை பெற்றது. 



பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரின் ஒரு போட்டியில் கூடலூரைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பி.எஸ்.ஜி., கல்லூரி அணி 2-வது வெற்றியைப் பெற்றது. 



இதேபோல, மற்றொரு ஆட்டத்தில் முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருந்த ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லூரியை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. 

Newsletter