கோவையில் 4-வது பிரதர்ஹூட் டிராபிக்கான போட்டிகள் ; ஓரிஜின் எஃப்.சி, இஸ்லாமியா அணிகள் வெற்றி

கோவை: இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த டிரேக் ஃபோர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பார்க் கல்வி குழுமமும் இணைந்து பிரதர்ஹூட் டிராபிக்கான கால்பந்து மற்றும் கபடி போட்டி கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தின.

கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கால்பந்து தொடரில் 46 அணிகளும், கபடிப் போட்டியில் 8 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. 

கால்பந்து மற்றும் கபடிப் போட்டிகளில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் ஓரிஜின் புட்பால் கிளப் மற்றும் இஸ்லாமியா அணிகள் பிரதர்ஹூட்-2018 டிராபியை கைப்பற்றின.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் மற்றும் அனுஷா ரவி ஆகியோர் சிறப்பு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

Newsletter