வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

ராஜ்கோட் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார பந்துவீச்சால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார பந்துவீச்சால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்., இழப்பிற்கு 649 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. கீமோ பால் (13), சேஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர். 

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. கீமோ பால் (47), சேஸ் (53) ஓரளவுக்கு தாக்குபிடித்தனர். இதைத் தொடர்ந்து, லீவிஸ் (0), கேப்ரியல் (1) சொதப்பினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பாலோ ஆன் தவிர்க்க முடியாததால் 468 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், ஹோப் (17), ஹெட்மயர் (11) சிக்கினர். பாவெலை (83) வெளியேற்றி, டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். இவரைத் தொடர்ந்து, ஜடேஜா 'சுழலில்' கீமோ பால் (15), லீவிஸ் (4) அவுட்டாகினர். கேப்ரியல் (4) ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி வரும் 12-ம் தேதி ஐதராபாத்தில் துவங்குகிறது.

Newsletter