மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகளில் சாம்பியன்சிப் வென்றது கற்பகம் பல்கலை.,

கோவை: கோவை மாவட்ட அளவில் ஞாயிறன்று நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் கற்பகம் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தை வென்றுள்ளது.

கோவை: கோவை மாவட்ட அளவில் ஞாயிறன்று நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் கற்பகம் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த போட்டிகளில் 128 புள்ளிகளுடன் கற்பகம் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், 109 புள்ளிகளுடன் இளம் தளிர் சிலம்ப கூடம் இரண்டாம் இடத்தையும் பெற்றன.

 

கற்பகம் பல்கலைக்கழகம், இளம் தளிர் சிலம்ப கூடம், போதி தர்மா குருகுலம், இந்தியன் சிலம்பம் அகாடமி, அனுமன் சிலம்பாலயா மற்றும் பல்வேறு பள்ளி-கல்லூரிகளைச் சேர்ந்த 120 பேர் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

போட்டிகள், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என்று நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காளப்பட்டி பகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் மூர்த்தி மற்றும் இன்டியன் சிலம்பம் அகாடமியை சேர்ந்த பயிற்சியாளர் முனியசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Newsletter