பள்ளிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் பேப்டிஸ்ட் அகாடமி அணி வெற்றி

கோவை : ரிலையன்ஸ் யூத் ஸ்போர்ட் பவுண்டேசன் கால்பந்து போட்டித் தொடரில், சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவில் பேப்டிஸ்ட் அகாடமி அணி வெற்றி பெற்றது.

கோவை : ரிலையன்ஸ் யூத் ஸ்போர்ட் பவுண்டேசன் கால்பந்து போட்டித் தொடரில், சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவில் பேப்டிஸ்ட் அகாடமி அணி வெற்றி பெற்றது.



கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் வகையில் ரிலையன்ஸ் யூத் ஸ்போர்ட் பவுண்டேசன் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஜுனியர், சீனியர் என இரு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இந்தப் போட்டித் தொடரில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பள்ளியைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. 



இதன் ஜுனியர் லீக் ஆட்டத்தில் பேப்டிஸ்ட் அகாடமி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி அணி, வி.சி.வி. சாய்ஷு வித்யாலயா மெட்ரிக் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. இதேபோல, சீனியர் பிரிவில், பேப்டிஸ்ட் அகாடமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வி.சி.வி. சாய்ஷு பள்ளி அணியைப் போராடி வென்றது. 

Newsletter