குறைந்த இன்னிங்சில் 10,000 ரன்களை கடந்தார் கோலி : சச்சினின் சாதனை முறியடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, குறைந்த இன்னிங்சில் 10,000 ரன்களை விளாசி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.



ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, குறைந்த இன்னிங்சில் 10,000 ரன்களை விளாசி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில், இந்திய அணியின் கேப்டன் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார். தொடர்ந்து, அபாரமாக ஆடிய அவர், 81 ரன்கள் குவித்த போது ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 10,000 ரன்களை விளாசி சாதனை படைத்தார். 

இதன்மூலம், 17 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த இன்னிங்சில் 10,000 ரன்களை கடந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கேப்டன் விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார். விராட் கோலி 205-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் 13-வது வீரராகவும், இந்திய அளவில் 5-வது வீரராகவும் 10,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

தற்போது, குறைந்த இன்னிங்சில் 10,000 ரன்களை கடந்தவர்களின் விபரம் : விராட் கோலி (205), சச்சின் (259), கங்குலி (263), ரிக்கி பாண்டிங் (266), காலீஸ் (272), தோனி (273), லாரா (278), டிராவிட் (287), தில்சன் (293), சங்கக்காரா (296), இன்சமாம்-உல்-ஹக் (299), ஜெயசூர்யா (328), ஜெயவர்த்தனே (333) ஆகியோர் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர். 

Newsletter