இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணிக்கு போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் குரூப் 8-யில் அடங்கிய பணித்தகுதி 4க்கான பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்த எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தேர்வு வரை சிறந்த வல்லுனர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர டிஎன்பிஎஸ்சி குரூப் 8 தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...