ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பு


கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் இன்று தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது, அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே.ஜானட் தலைமையேற்று மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் குறித்து உறுதிமொழி உரையாற்றினார்.



அப்போது, இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஜனநாயத்தின் மரபுகள் மற்றும் கடமைகளை நிரைவேற்றுவது நமது பொறுப்பு. எவ்வித இலவசங்களையும் ஏற்று வாக்களிப்பது தவறு. ஒவ்வொரு தேர்தலிலும் இனம், மதம், சமுதாயம், மொழி உள்ளிட்டவற்றில் பாகுபாடின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும், மாணவர்களிடையே அவர் உரையாற்றுகையில், வாக்காளர் பட்டியளில் தங்களது பெயர்கள் உள்ளனவா என்று மாணவர்கள் ஆய்வு செய்து தேர்தலில் முறையாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை, அதனை எக்காரணத்திற்காகவும் நாம் தவிர்க்கக் கூடாது. மக்கள் நூறு சதவிகித வாக்கினை உறுதிசெய்ய வேண்டும்.



அதற்கான முதற்படி படித்த இளைஞர்கள் முன் வந்து வாக்களிப்பதே ஆகும். மாணவர்களை பின்தொடர்ந்தே மக்களும் தங்களது வாக்கினை உறுதிசெய்வர். கல்வியறிவற்ற மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதேப்போன்று, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியிலும் அக்கல்லூரி முதல்வர் டாக்டர். பி. பாபாஞானகுமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...