ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்த விஎல்பி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம்

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஒரு பகுதியாக, பன்னாட்டு குளிர்பானமான கொக்ககோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தடைசெய்ய வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, பல வனிகர்களும் மாணவர்களின் விழிப்புணர்வுக்கு ஆதரவு தெரிவித்து இனி தங்களது வனிகவளாகத்தில், உணவு விடுதியில் இதுபோன்ற பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதை தடைசெய்வதாகவும், இளநீர் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியமான பானங்களை விற்பனை செய்யப்போவதாகவும் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் செயல்பட்டு வரும் விஎல்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் தற்போது தங்களது உணவு விடுதியில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளது.

மேலும், கொக்ககோலா, பெப்சி மற்றும் அந்நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் கூட விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறு, மற்றும் பல பாரம்பரியமான பானங்களை விற்க முடிவெடுத்துள்ளதாக அக்கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இதேப்போன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமமும் இனி வரும் காலங்களில் தங்களது கல்வி நிறுவனங்களில் பெப்சி, கொக்க கோலா உள்ளிட்ட பன்னாட்டு பானங்களை தடை செய்வதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...