கோவையில் இரயில் நிலையம் முற்றுகை- ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து, கோவையில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமான பணிகள் நடைபெறுவதை தடுத்த நிறுத்து வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்தும், கட்டுமான பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் ம.தி.மு.க வினர் கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தடுப்புகளை மீறி இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியினால் பாசனம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பவானி மற்றும் அமராவதி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக இரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...