ஜல்லிகட்டின் போது உயிரிழப்பை தடுக்க உயிர்காக்கும் பாதுகாப்பு வசதிகளை செய்து தர கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை


ஜல்லிகட்டினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மாடுபிடி வீரர்களுக்கு உயிர்காக்கும் பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளின் பாதுகாப்பிற்காக கால்நடை துறை சார்பாக காளையின் உடல்நிலை மற்றும் வயது ஆகியவை கருத்தில் கொள்ளபட்டு பரிசோதனைகள் மற்றும் சில வழிமுறைகள் பின்பற்றபடுகின்றன.

குறிப்பாக போட்டியின் போது காளையை தார் ஊசியால் குத்த கூடாது. மிளகு, மிளகாய் பொடிகளை காளைகள் மீது தூவ கூடாது. காளைகளுக்கு மது உள்ளிட்ட போதைபொருட்களை கொடுக்க கூடாது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஆனால் மாடுபிடி வீரர்களுக்கு உயிர்காக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் ஆண்டு தோறும் உயிர் இழப்புகள் மற்றும் காயங்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை தடுக்க மாடுபிடி வீரர்களுக்கு உயிர் காக்கும் கவசங்களான வயிற்று கவசம், நெஞ்சு கவசம், சீறுநீரக கவசம் ஆகியவற்றை வழக்கு வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் உயிர் இழப்பை தடுக்க முடியும். 

அதேபோல் எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகாமல் இருக்க மூழங்கால் மற்றும் மூழங்கை, கணுக்காலை பாதுகாக்க பாதுகாப்பு பட்டைகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும். 

போட்டி ஆரம்பிக்கும் முன்னர் பிற விளையாட்டு போட்டிகளை போல மாடுபிடி வீரர்களின் உடற்தகுதியை பிசியோதெரபி மருத்துவரின் பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும்.

உடல் பலவினமாக குறிப்பாக இருதய, நுரையீரல் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தமுள்ள மாடுபிடி வீரர்களை அனுமதிக்கூடாது.

போட்டியின் போது மாடுபிடி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும். இதில் பொது மருத்துவர் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பிசியோதெரபி மருத்துவரை நியமிக்க வேண்டும். 

வீரர்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைவை சரிசெய்ய குளுக்கோஸ் நீர் போன்றவற்றை மருத்துவ குழுவினர் தயார்படுத்த வேண்டும். போட்டி நடைபெறும் இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். 

மாடுபிடி வீரர்களின் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பயிற்சி முகாம்களை நடத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். 

இந்த வழிமுறைகளை பின்பற்ற 2009 ஆண்டு கொண்டு வரபட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நடைமுறை படுத்த முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...