விஎல்பி கல்லூரியின் சார்பில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான "விவயுவ- 2017" போட்டிகள் இன்று துவக்கம்


கோவையில், விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் "விவயுவ- 2017" என்னும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு இன்று துவக்க விழா கொண்டாடப்பட்டது.



இதில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மின்னணுவியல் துறை சார்பாக ஒரு மாபெரும் கண்காட்சியும் நிகழ்த்தப்படவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளிலும் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் துவக்க விழாவில் கோவை தி ஹிந்து நாளிதழின் முன்னாள் நிருபர் அமுதாகண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆங்கிலம் என்பது ஒரு பாடம் அல்ல. அது ஒரு மொழி என்றும், தகவல் தொடர்பிற்கு மொழியின் அவசியம் குறித்தும் சமுதாயத்தில் தன்னை ஒரு வரலாறாய் பதிவு செய்வதற்கு மொழியும், எழுத்துப்பணியும் அவசியம் என்றும், மாணவர்களிடையே எழுத்துப் படைப்பாற்றல் வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் ஆங்கில மொழியில் தன்னளவில் மேம்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மாணவர்களிடையே கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி உற்சாகப்படுத்தினார்.



இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் ஜெயஸ்ரீசந்தோஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ந.ராஜ்குமார் தலைமையுரை வழங்கினார். இளங்கலை இயக்குநர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.

நிறைவு விழாவில், கோவைபுதூர் சாந்தி ஆஷ்ரமத்தின் இயக்குநர் வினுஅறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.1 லட்சம் ரொக்க பணத்தினை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக பேராசிரியை ஜாய்சுகன்யா நன்றியுரை வழங்கினார். மின்னணுவியல் துறை கண்காட்சி, துறைத் தலைவர் வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.



Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...