திருநாவுக்கரசரின் கருத்து ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கோவையில் பேட்டி

தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகர் முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வினை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை யாருமே கைது செய்யப்பட வில்லை எனவும் தற்போது திருப்பூரில் கொலை செய்யப்பட்டுள்ள முத்துவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுவதாகவும் கூறினார். இறந்த முத்துவின் உடல் அருகே பிரதமர் மோடியின் படமும், பா.ஜ.க கொடியும் அவமதிப்பு செய்யப்பட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் முத்து மரணத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக  மத்திய அரசின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மாநில அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டதுடன் இதற்காக தமிழக முதல்வர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, அதற்கு எதிர்மறையாக பேசுவது ஏன் என தெரியவில்லை எனவும் ஆனால் மக்களுக்கு உண்மை நிலை புரியும் எனவும் தெரிவித்தார். இதே போல தமிழக அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்து அடிபப்டை ஆதாரமற்றது எனவும் தமிழிசை சவுந்திராஜன் பதிலளித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...