குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணை கட்டுப்பாட்டாளர் டாக்டர் எஸ்.பி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  à®‡à®µà¯à®µà®¿à®´à®¾à®µà¯ˆ துவங்கிவைத்தார்.



இதைத்தொடர்ந்து, அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத்தைப் பற்றியும் அதை சார்ந்த தகவல்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

முன்னதாக குமரகுரு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் வரவேற்புரை ஆற்றினார். இணை தாளாளர் சங்கர் வானவராயர் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். 

இதைத்தொடர்ந்து, குமரகுரு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் 6 ஆவணங்கள் காப்புரிமைக்காக சமர்ப்பிக்கபட்டுள்ளது. இத்தகைய தொடக்கம் இனி வரும் மாதங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேலும் பல ஆவணங்களுக்கு காப்புரிமை பெற உறுதுணையாக இருக்கும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...