மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்- கொ.ம.தே.க.ஈஸ்வரன்


உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால், உள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் விரைவாக நடத்த வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாநகர பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தமிழகத்திற்கு எதிரானது என தெரிவித்தார். 

இதே போல மற்ற மாநிலங்கள் பாதிக்கும் வகையில் மாநில அரசுகள் தன்னிச்சையாக ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவதை தவிர்க்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கும் மாணவர்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், அப்பாவி மாணவர்கள் மீது காவல் துறையினரால் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், நதிகளை இணைப்பது தொடர்பாக தமிழக பா.ஜ.க-வின் பதில் என்ன என கேள்வி எழுப்பினார். 

தேசிய நதிகளை இணைப்பதே நதிநீர் பிரச்சணைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையுமென கூறிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நதிகளை இணைக்க மக்கள் போராட்டம் நடத்த முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். 

விவசாயிகள் தற்கொலைகளுக்கு வங்கிக்கடனே காரணமெனவும், விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

வறட்சி பாதிப்புகள் தொடர்பாக மத்திய குழுவினர் கண்துடைப்பிற்காக பெயரளவு ஆய்வு நடத்தியதாகவும், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால், தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...