வன விலங்குகளை தாக்க வேண்டாம் என நீலகிரி மக்களுக்கு வன அதிகாரிகள் வேண்டுகோள்



நீலகிரி மாவட்டம் குன்னூர் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சவுந்தரராஜன், பாபு, விக்ரம், மணிகன்டன் ஆகியோர் இன்று வனவிலங்குகளை தாக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது பொது மக்களுக்கு தண்டோரா மூலம் குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகளான கரடி, காட்டுமாடு, சிறுத்தை, யானை போன்றவற்றை விரட்டவோ, அவற்றை கற்கள், நெருப்பு மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கவோ கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், வன விலங்குகள் ஊருக்குள் வந்தால் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் என்னும் பகுதியில் உள்ள மயானத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது.



மேலும், கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் குன்னூர் பகுதியில் காட்டு எருமை தாக்கியதில் ஒருவர் பலியானார்.

இவ்வாறு குன்னூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகளின் தாக்குதலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதையொட்டி மனித- விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும். வனத்துறையினர் காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது வனத்துறையினர் காட்டு விலங்குகளை கண்டால் தாக்கக் கூடாது என அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை à®à®±à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®¿à®¯à¯à®³à¯à®³à®¤à¯.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...