பாலின பாகுபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஸ்டெப்அவுட் சைக்கிள் பயணம்


பாலின வேறுபாடுகள் குறித்தான தவறான கருத்துக்கள் இன்னும் நம் நாட்டில் பரவலாக காணப்படுகிறது. நம் நாட்டு மக்கள் தற்போது வரை ஆண் மற்றும் பெண்களுக்கான சமூகக் கடமைகள் மாறுபடுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அல்லது அவர்கள் இதுவொரு நிரந்தர விதி என கருதி தொடர்ந்து வருகின்றனர்.

ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் பின் வரும் வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கக் கூடும். "இதைத்தான் நீ செய்ய வேண்டும்". "இதைத்தான் உன்னால் செய்ய இயலும்". ஆனால் இவ்விரு சொற்றொடர்களும் இளைஞர்களுக்கு சோர்வடையச் செய்யக் கூடியதாகவும், ஒரு முட்டுக்கட்டையாகவும் இருக்கும். ஆராய்ச்சிப்படி இவ்வாறான ஒருமைப்படுத்துதல், இயற்கையாக உருவாவதைவிட செயற்கையாக உருவாக்கப்படுகிறது.

நகர்புரங்களில் தொழில்நுட்பத்தின் பயனாக இந்த வேறுபாடுகள் குறையத்துடங்கியுள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களின் பயனைப் பெறாத கிராமப்புரங்களில் வாழும் மக்கள் இன்னும் இதுபோன்ற எண்ணங்களில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பெண்கள் எவரெஸ்ட் முதல் வின்வெளி வரை அனைத்து இடங்களிலும் கால் பதித்துள்ளனர். அவர்கள் தங்கள் சுய முயற்சியில் பாலின வேறுபாட்டால் வரும் தடைகளை உடைத்தெறிந்துள்ளனர். ஆனால், வருந்தத்தக்கது என்னவென்றால் இன்னும் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியே வராமல் தங்களுக்கு இருக்கும் தனி திறமைகளை வீனடித்து வருகின்றனர். இவையெல்லாம் பாலிய வேறுபாடுகளில் உள்ள நம்பிக்கையின் காரணமாகவே நடக்கிறது.



கோவையைச் சேர்ந்த தீபன் வேலுச்சாமி, பெங்களூரைச் சேர்ந்த ஸ்ருதி சிவங்கர் ஆகிய இருவரும் இந்த பாலின வேறுபாடுகள் குறித்த கற்பிதழ்களை உடைத்தெறிய காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஸ்டெப்அவுட் என்ற ஒரு சைக்கிள் பயனத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்.

நேஷனல் ஜியாகிரபி என்னும் தொலைக்காட்சியில் ஆர்என்டி பிரிவில் பணியாற்றும் தீபன் அவர்கள் இதுவரை பல பயனங்களை மேற்கொண்டுள்ளார். அந்த பயனங்களின் போது பல்வேறு புதிய பகுதிகளுக்கு பயனித்து அதுகுறித்து பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து தீபன் கூறுகையில், எனக்கு மறக்க முடியாத ஒரு பயணம் என்பது நானும் எனது நண்பர் முத்துக்குமாரும் இந்தியா முழுவதுமாக 2011-யில் எங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டதாகும். 2011 ஜுலை 25ம் தேதியன்று தொடங்கிய எங்களது பயணம் 28 மாநிலங்களிலும் சுற்றி ஏறக்குறைவாக 40 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்தோம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளை மட்டும் அல்லாமல் நேபால் மற்றும் பூடான் நாடுகளில் உள்ள இயற்கை விவசாயிகளை சந்தித்தோம்.

மைசூரைச் சேர்ந்த ஸ்ருதி சிவசங்கர் மூர்த்தி குழந்தைகளுக்கான கல்வி ஆலோசகராக உள்ளார். மேலும், வாழ்க்கைக் கல்வி குறித்து பயிற்சியளிப்பவராகவும் உள்ளார். அவர் 2013-யில் தன் வேலையை உதரிவிட்டு ஆய்ச்சிப் படிப்பை துவங்கினார். தன்னுடைய ஆராய்ச்சிப் படிப்பின் நிமத்தமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு பயணம் செய்தார். 

அவர் அந்த பயணங்களின் போது மாணவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடி அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அங்கிருந்து அவர் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக பயணித்தார். அப்போது இருந்து நான் என் பாதையை திரும்பிப் பார்க்கவில்லை என கூறினார் ஸ்ருதி. 

சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் போது எனக்கு ஒரு சுதந்திரமான உணர்வு ஏற்படுகிறது. நான், வெளியில் சென்று பாலின பங்கு குறித்தும் அவர்களின் சரியான அறிவு, குணம் மற்றும் திறன்கள் குறித்தும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன்.

மேலும், பாலின வேறுபாடு என்னும் கூட்டில் இருந்து வெளியே வருவதற்கும், அவர்களது வாழ்வை வாழ்வதற்கும் பயிற்சியளிக்கிறேன். இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். நாங்கள் ஒரு குழுவாக சந்திக்கும் நபர்களின் வாழ்வில் ஒரு சிறிய மாற்றத்தை உருவாக்குவோம் என நம்புகிறேன்.

ஸ்டெப்அவுட் என்ற அவர்களது முயற்சி குறித்து தீபன் கூறுகையில், நான் ஸ்ருதியை எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் சந்தித்தேன். எங்கள் இருவருக்கும் சைக்கிள் ஓட்டுவதில் இருந்த ஆர்வமும், வேறு விசயங்களில் இருந்த பொதுவான ஆர்வமும் எங்களை இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு தூண்டுகோலாக அமைந்தது. இதுவே ஸ்டெப்அவுட்டாக உறுவானது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஸ்ருதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டு 13 மாநிலங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களைச் சந்திப்பார். இந்த பயணம் முழுவதும் இதுபோன்ற பள்ளி மாணவர்களைச் சந்தித்து இந்த பாலின வேறுபாடுகள் குறித்த பங்கு குறித்து உரையாடுவார். 

இதில் அவர் பல்வேறு புவி அமைப்பில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பொருளாதார நிலைகளில் இருந்து வந்த மாணவர்களுடன் உரையாடுவார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சிறு நாடக நிகழ்ச்சிகளும் இந்த பயணத்தின் போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நான், சாலை குழுவின் தலைவராக இருந்து ஸ்ருதி பயணம் மேற்கொள்ள வேண்டிய வழிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி அவருடைய பயணத்திற்கு உறுதுணையாக இருப்பேன். 

ஸ்டெப்அவுட் குழுவின் ஒரு உறுப்பினரான அனங்காபாலகிருண்ணன், பள்ளிகளுடன் தொடர்புகொண்டு இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார். நாங்கள் இருவரும் ஸ்கார்பியோ வாகனத்தில் பயணம் மேற்கொள்வோம். ஸ்ருதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்வார். நாங்கள் ஒரு நாளைக்கு 140 கிலோ மீட்டர் வரை பயணம் மேற்கொள்வோம் என்று கூறினார். 

சைக்கிள் பயணத்தின் மூலம் பாலின வேறுபாடுகளை கலைய முயல்வது இது புதுமையானதொரு முயற்சி மட்டுமல்லாமல் இக்காலகட்டத்தில் மிகவும் தேவையானதும் கூட. எங்கள் குழு மிகவும் உத்வேகத்துடன் வரும் பிப்ரவரி 6-ம் தேதியன்று பயணத்தை துவங்க காத்துள்ளனர்.

ஸ்டெப்அவுட் பயணத்தை பாதுகாப்பு மற்றும் வெற்றிகரமாக மேற்கொள்ள சிம்ப்ளிசிட்டி குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...