பாரதியார் பல்கலை.யில் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் குறித்து சிறப்பு விரிவுரை நடைபெற்றது


பாரதியார் பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் வரலாறு சார்ந்த பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விரிவுரைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்பகுதியாக வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை வரலாற்றுத் துறையின் முதலாம் ஆண்டு வகுப்பறையில் நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர் மகேஸ்வரன் பங்கேற்றார். 

இதில், வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் பூபதி (பொறுப்பு) சிறப்பு விரிவுரையாளரை வரவேற்று உரை நிகழ்த்தி, துறையின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் தனது உரையின் துவக்கத்தில் தொல்பொருளியல் குறித்தும், அத்துறையில் வரலாறு பயிலும் மாணாக்கருக்குள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றியும் விளக்கினார். 

பின், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், அதன் பிரிவுகள், அதன் பல்வேறு கூறுகள், அக்கால மக்களின் வாழ்வியல் குறித்து நமக்குக் கிடைத்த சான்றுகள் பற்றி விரிவுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்வேறு அரும்பொருட்களின் புகைப்படங்களைக் காட்டி, பல தகவல்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாணவ, மாணவியர் அரும்பொருட்கள் சேகரிப்பில் பங்கேற்று ஓர் அருங்காட்சியகம் அமைக்க முனைவர் மகேஸ்வரன் ஊக்கப்படுத்தினார். 

நிறைவாக வரலாறு மற்றும் சுற்றுலாத்துறையின் விரிவுரையாளரான சங்கீதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...