தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குத்த பிப். 6ம் தேதி முதல் சிறப்பு முகாம் துவக்கம்


குழந்தைகளுக்கு 10-வது மாதம் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது தட்டம்மை தடுப்பூசிக்கு பதிலாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமினை சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகள் இணைந்து நடத்தவுள்ளன.

6 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அனைத்து அரசு, அரசு உதவிபெரும் மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படவுள்ளது. 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் பள்ளி செல்லாத பிற குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி முகாமானது கோவை மாவட்டம் முழுவதும் ஊரகப்பகுதிகளிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 431, 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். 1996 முகாம்கள் பள்ளிகளிலும், 958 முகாம்கள் ஊட்டச்சத்து மையங்களிலும் நடைபெறவுள்ளது.

இந்த முகாமினை கோவை மாவட்ட மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...