டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

 

இதுகுறித்து மாநகராட்சி (பொ) ஆணையர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து 100 வார்டுகளிலும் டெங்கு தொடர்பான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



மேலும், மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சுகாதார அலுவலர்கள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுவதும், தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், குடங்கள், ஆட்டுகல், பூங்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டும் மற்றும் டெங்கு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொண்டும் வருகிறார்கள். 

மேலும், மாநகராட்சி புகை வண்டி வாகனங்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளுக்கு சென்று புகை மருந்து அடித்து வருகிறார்கள். 

மேலும், குறிப்பாக பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியும், மாடியிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொசு மருந்து ஊற்ற வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். வீட்டைச் சுற்றியும், மாடியிலும் தேவையற்ற பொருட்களை போட வேண்டாம். தண்ணீரை காற்றுப் புகாத வண்ணம் மூடி வைக்கவும் அல்லது துணிகளைக் கொண்டு கட்டி வைக்கவேண்டும். 

மேலும், குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், அனைத்து சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...