கோவையில் விதிகளை மீறி அமைக்கப்படும் பட்டாசு கடைகள் - ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி திருமண மண்டபங்களில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதுபோன்ற கடைகளால், கடந்த காலங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விதிமுறைகளை மீறி போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரும் 24.10.2022 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காக கோவை மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள் போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பட்டாசு கடைகள் போடுவதற்கான விதிமுறைகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் போடப்படுகிறது. இதனால் விபத்துகளும் பொதுமக்களுக்கு ஆபத்துகளும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் விதிமுறைகள் மீறி திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும், முன்னெச்சரிக்கைநடவடிக்கை எதுவும் எடுக்காமல் போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

விதிமுறைகள் மீறி செயல்படும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள் விதிமுறைகள் படி போடப்பட்டுள்ளதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்ததவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...