தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகரில் 'போலீஸ் அக்கா' திட்டம் அமல் - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் மாணவ - மாணவிகளின் நலனுக்காக கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தலா ஒரு பெண் காவல் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவின் பேரில் தமிழக காவல்துறையில் முன்மாதிரி திட்டமாக கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களின் நலன் கருதி "போலீஸ் அக்கா" என்ற சேவை துவங்கப்பட்டுள்ளது.



கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.

கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது.

கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக (போலீஸ் அக்காவாக) செயல்பட்டு அவர்கள் கொடுக்கும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.



காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திட்டத்தின் துவக்க விழாவில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் சுஹாசினி உட்பட கோவை மாநகரத்தில் உள்ள 60 கல்லூரி நிர்வாகிகள் மற்றும் 37 பெண் காவலர்கள் (போலிஸ் அக்காக்கள்) கலந்து கொண்டனர்.



இந்த புதிய திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...