மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் - உதகை தமிழகம் மாளிகையில் எம்பி ராசா தலைமையில் நடைபெற்றது

திமுக ஆட்சியின்போது நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கியது. நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ தொழிற்சாலையை மீண்டும் லாபகரமாக இருக்க முதல்கட்டமாக தமிழக அரசு 80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. உதகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் எம்பி ராசா உரை.


கோவை: உதகை தமிழகம் மாளிகையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி ராசா நிருபர்களிடம் கூறியதாவது.



"அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ வழக்கு போட்டுள்ளது" வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு குறித்து 2 ஜி வழக்கிலேயே வருமான வரித்துறை, சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு உட்பட அனைத்து பிரிவினரும் 5 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக கூறி முதன்மை விசாரணை அதிகாரி உள்ளிட்ட அனைவரும் இது என்னுடைய சொத்து இல்லை என்று விசாரித்து கூறிவிட்டார்கள்.

நான் தாெடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பல கருத்துக்களை கூறிவருவதாலும் எதிர்த்து குரல் கொடுப்பதாலும் பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற வழக்குகளை மீண்டும் போட்டுள்ளார்கள் என்றார்.

2ஜி வழக்கையே சந்தித்த நான் இதையும் எதிர்கொள்ள மாட்டேனா? மத்திய அரசு இந்தியாவில் கட்டிய 80 சதவீத கழிப்பிடங்கள் பயனற்று உள்ளது. கழிப்பிடங்கள் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிபுணர்வு ஏற்படுத்த வில்லை. பெரும்பாலான கழிப்பிடங்களில் தண்ணீர் இல்லை இப்படி இருக்கும் மத்திய அரசு கழிப்பிடங்கள் கட்டி கொடுத்துள்ளோம் என்று பெருமை மட்டும் பேசிக்கொள்கிறார்கள் என்றார்.

மாநிலங்கள் கொடுக்கும் வரி பணத்தை தான் மத்திய அரசு செலவு செய்கிறது. நஷ்டத்தில் இயங்கும் டேன் டீ தொழிற்சாலையை மீண்டும் லாபகரமாக இருக்க முதல்கட்டமாக தமிழக அரசு 80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. செக்ஷன் 17 நிலத்தில்10 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

மின் இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொழிற் துறை மூலம் எச்பிஎப் தொழிற்சாலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என எம்பி ராசா கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...