கோவையில் தீபாவளி வரை இரவு 1.00 மணி வரை வணிக நிறுவனம் இயங்க அனுமதி; சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டும் - மாநகர காவல்துறை

தீபாவளி பண்டிகையின் கூட்ட நெரிசலை தவிர்க்க மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, தீபாவளி வரை இரவு 1 மணி வரை கடைகள் திறந்திருக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு, இரவில் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாக கடைகள் இயங்கும் நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

மேற்படி, ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களும் இரவு 1.00 மணி வரை செயல்படலாம் என்றும் இரவில் கடைகளுக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் செல்ல ஏதுவாக கூடுதல் அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கு இயக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நேற்று இரவு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கடைவீதி பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மற்றும் கூட்ட நெரிசலை நேரில் ஆய்வு செய்தார். இப்போது, தீபாவளி பண்டிகையை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட காவல்துறை சார்பில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், கூடுதல் போக்குவரத்து மற்றும் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் கடைகள் செயல்பட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...