தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்க முயன்ற அசாம் இளைஞர் கைது…!

கோவை தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணியின் போது, இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்க முயன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொண்டாமுத்தூர் போலீஸார் தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்ட போது, தொண்டாமுத்தூர் அருகே சாலை ஓரத்தில் சந்தேகத்திடமாக நின்றுகொண்டிருந்த வட மாநில இளைஞரை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஃபைசுல் இஸ்லாம் (21) என்பதும், கோவையில் தங்கி பணியாற்ற வந்தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...