கோவையில் நடந்த காவலர் பயிற்சி நிறைவு விழா கூடுதல் காவல் துறை இயக்குநர் பங்கேற்பு…!

பயிற்சி காவலர்களின் நிறைவு அணி வகுப்பு விழா, கோவைப்புதூர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி நான்காம் அணி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் கலந்துக் கொண்டார்.


கோவை: தமிழ்நாடு சிறப்பு இரண்டாம் நிலை காவலர் 235 பேர் பயிற்சி காவலர்களின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட, கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



தொடர்ந்து, காவலர்கள் முன்னிலையில் பேசிய காவல் துறை இயக்குனர் (காவல்துறை நவீன மயமாக்கல்) சஞ்சய் குமார் கூறும் போது:



இன்று பயிற்சி முடிந்து செல்கிறீர்கள் அதோடு பொறுப்பும் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கார்லாந்து போலீஸுக்கு இணையான போலீஸ், தமிழக போலீஸ் என கூறினர். அவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இளங்கன்று பயமறியாது என்ற வார்த்தைக்கிணங்க தைரியமாக செயல்படுங்கள். குடியரசு தலைவரின் சிறந்த காவல் துறைக்கான விருதை தமிழக காவல்துறை பெற்று பெருமை சேர்ந்துள்ளோம். தற்போதைய பயிற்சி முடித்துள்ள உங்களில் 72 பேர் பொறியாளராக இருக்கலாம், 27 பேர் திருமணம் முடித்திருப்பீர்கள், ஏனைய 205 பேர் சில ஆண்டுகளில் திருமணம் முடிக்க இருக்கிறீர்கள். எனவே குடும்பத்தின் மீது உங்களுக்கு பொருப்பு வேண்டும்.

அதே போல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் பணி குறித்து அறிந்து உங்களது பொறுப்பை அவர்களும் தெரிந்திருக்க வேண்டும்.



போலிஸ் பணி மிக பெருமையான பணி.



இதில், எளிதில் பாராட்டுகள் கிடைக்காது, ஆனால், பணிக்கான மரியாதை உங்களுக்கே தெரியும், என்று விழாவில் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...