ஜெ. மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை புரொபஷனல் கிடையாது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையை, பாடமாக வைத்து காவல்துறை கற்றுக் கொள்ள வேண்டும்.



கோவை: கோவையில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.



அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. அதில் தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளன.

அத்திக்கடவு திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை?. பரம்பிகுளம் அணையில் இருந்து, 12 டி.எம்.சி நீர் வீணாகியுள்ளது. இனி இதுபோன்று நடக்க கூடாது. கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். அதற்கான தேவை உள்ளது.

ஒரே நாளில் விவாதம் இல்லாமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஜனநாயகம் இல்லை. தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. முதல்வர் இதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் அது போதுமானது இல்லை. போதுமான அளவு இந்தத் துறையில் காவலர்கள் இல்லை.

ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். விமானத்தில் சென்னையில் இருந்து வந்தேன் ரூ.3,300 செலவானது. இதே நிலை தான் ஆம்னி பேருந்திலும் உள்ளது.

தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனங்கள் மாபியா போல விலையேற்றம் செய்கின்றனர். ஒரு வருடத்தில் நான்கு முறை விலை ஏற்றி உள்ளனர்.



மேலும் தீபாவளிக்காக டாஸ்மாக் à®µà®¿à®±à¯à®ªà®©à¯ˆà®•்கு டார்கெட் வைக்கிறார்கள். டாஸ்மாக் à®®à¯‚லம் வரும் நிதி வளர்ச்சி கிடையாது வீழ்ச்சி. அரசுக்கு வருமானம் 33 விழுக்காடாக இருந்தாலும் இது இழப்பு தான். ஒன்றரை லட்சம் கோடி வரை இழப்புதான்.

கல்விக்கு இப்படி இலக்கு வையுங்கள். தடுப்பூசிக்கு இலக்கு வையுங்கள், குடிக்கு இலக்கு வைக்காதீர்கள். இது அரசுக்கு கேடு.

மேலும் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம், பாண்டியாறு பொன்னம்பல திட்டம் பேசித் தீர்க்க வேண்டும். இது தமிழ்நாடு - கேரளா என இருமாநில பிரச்சினை. தமிழக முதல்வர் இதனை சரி செய்ய வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் அறிக்கை தொழில்முறையானது (Professional) இல்லை, அந்த அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம். அதில் தொழில்நுட்ப ரீதியாக எதுவும் சொல்லப்படவில்லை. சட்டமன்றத்தில் எடுபடுமா என்ற கேள்வி உள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைப் பாடமாக வைத்து காவல்துறை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...