தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை.

தீபாவளி முடிந்து மறுநாள் புறப்படும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், தீபாவளிக்கு மறுநாளான அக்.25ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்ககோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் இந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.

இக்கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து வெளியூருக்கும் வெளியூரிலிருந்து சென்னைக்கும் பல தரப்பு மக்கள் பயணம் செய்ய உள்ளனர்.

கூட்ட நெரிசல் இன்றி எளிமையாகவும் இனிமையாகவும் பயணம் செய்ய பல்வேறு சிறப்பு பேருந்துகளை தங்களின் வழிகாட்டுதல்படி போக்குவரத்துத்துறை அறிவித்தமைக்கு நன்றி.

இந்த வேளையில் கொண்டாட்டம் முடித்து மீண்டும் அவரவர் இருப்பிடங்களுக்கு ஒரு சேர அனைவரும் திரும்பும் பொழுது மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தீபாவளி தினத்திற்கு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பின்னொரு நாளில் ஈடுசெய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது விடுமுறையாக அறிவித்து உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...