கோவை விமான நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம பெட்டி - பாதுகாப்பு படை விரர்கள் சோதனை: பரபரப்பு..!

கோவை விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த நிலையில், சந்தேகமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை மேற்கொண்ட பின் அதனை எடுத்துச் சென்றனர்.



கோவை: வெளிநாடு, உள்ளூர் என பயணிப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் வந்து செல்வதால், கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அதே விமானத்தில் பாமக தலைவர் அன்புமணி வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதனிடையே விமான நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதனால் சந்தேமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பெட்டியை சோதனை செய்தனர்.



இதையடுத்து கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியை பாதுகாப்பு படை வீரர்கள் எடுத்துச் சென்றனர்.

நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...