கோவை பச்சாகவுண்டம்பாளையம் அருகே வியாபாரியை தாக்கி வழிப்பறி - வாகன சோதனையில் கொள்ளையர்களை கைது செய்த போலீசார்

பச்சாகவுண்டம்பாளையம் அருகே வியாபாரியை தாக்கி ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யபிரகாஷ், மதுரையை சேர்ந்த அன்பழகன் ஆகியோரை வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை புறநகர் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. பணியை முடித்துவிட்டு வீடு திரும்பவோர் அல்லது இரவு நேரத்தில் வெளியூருக்கு பயணிப்போரிடம் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்டு பறிக்கப்பட்ட பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு விக்னேஸ்வரன் என்பவர் பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது காய்கறி கடையை மூடிவிட்டு மண்டியிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது வியாபாரத்தை முடித்த கையோடு ஒரு குறிப்பிட்ட ரொக்க பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையறிந்த இரண்டு வாலிபர்கள் விக்னேஸ்வரனை பின்தொடர்ந்து வந்து கட்டையால் அடித்துள்ளனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், விக்னேஷ்வரனிடம் இருந்து 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை அந்த வழிப்பறி கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் அப்பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு சந்தேகப்படும் படியாக இருவர் உலா வருவதனை பார்த்த காவல் ஆய்வாளர் மாதையன், அவர்களை பிடித்து விசாரித்துள்ளார். அதில் விக்னேஸ்வரனை கட்டையால் அடித்து இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாயை வழிப்பறி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யபிரகாஷ், மதுரையை சேர்ந்த அன்பழகன் என்பது தெரியவந்தது.

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் வேறு ஏதேனும் குற்றங்களில், வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.



மேலும் இருவரிடம் இருந்த பணத்தை மீட்ட போலீசார், உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...