கோவை மாவட்ட அளவிலான தரவரிசைகான கேரம் விளையாட்டு போட்டிகளில் 300ம் மேற்பட்டோர் பங்கேற்பு.


கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் குறிச்சி செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது. இதில் ஒற்றையர், இரட்டையர், ஜூனியர், சீனியர் மற்றும் மூத்தோர் பிரிவில் 300கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.



3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு புள்ளிகளின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யபடுவர்.

முதல் பரிசாக ரூபாய் 5000 இரண்டாவது பரிசு 3000 மூன்றாவது மற்றும் நான்காவது பரிசு தொகை 1000 வழங்கப்படும் என போட்டி ஒருங்கினைபாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் இப்போட்டியில் தேசிய அளவில் பங்கேற்ற வீரர்களான தங்ககுமார்,கணேசன், தங்கராஜ், செந்தில், மற்றும் பழனிசாமி ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் வரும் ஞாயிறு வரை நடைபெற்று அன்று மாலை பரிசளிப்பு நடைபெறுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...