கோவை ஆலாந்துறையில் செம்மண் கடத்திய லாரி பறிமுதல் - தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே அனுமதியின்றி ஒன்றரை டன் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் அரசு அனுமதியளித்த அளவை மீறி செம்மண் எடுக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி கனிம வளக்கொள்ளை நடைபெற்றுள்ளதாக கூறி, செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தொண்டாமுத்தூர், ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக செம்மண் எடுத்து கடத்தப்படுவதோடு சட்டவிரோதமாக செங்கல் உற்பத்தி செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ஆலாந்துறையில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆலாந்துறையில் நேற்றிரவு கனிமவளத்துறை வட்டாச்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்திய போது லாரியில் இருந்த ஓட்டுநர் திடீரென தப்பியோடினார். இதனையடுத்து லாரியை சோதனை செய்த போது, அதில் 1.5 யூனிட் செம்மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலாந்துறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...