கோவை முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள், இந்நாள் படை வீரர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில், படை வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் உள்ளவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படை வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சிறப்பு நிதி உதவி, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி சலுகை, இலவச காது கேட்கும் கருவி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்நிலையில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதில் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 11 முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 3.40 லட்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் ஒரு நபருக்கு ஒரு லட்சம் வீட்டுக்கடன் மானியம் என 12 நபர்களுக்கு 4.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் நலன் உதவி இயக்குனர் மேஜர் ரூபா சுப்புலெட்சுமி, ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...