கோவையில் வரும் அக்.28 முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்

கோவை பால் கொள்முதல் விலை உயர்வு,ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.28 ஆம் தேதி முதல் ஆவினுக்கு வழங்கப்படும் பால் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.



கோவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கோவை, திருப்பூர் மாவட்ட உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் உற்பத்தி செய்து கொடுத்து வரும் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஏற்கனவே மாநில நிர்வாகிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதுவரை முடிவு எடுக்கப்படாததால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் ஆவினுக்கு வழங்கப்படும் பால் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து வருவதால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர். ஆவின் நிறுவனம் விலையை உயர்த்தாததால் மேலும் சிலரும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...