இந்தியாவிற்கே டீ ஷர்ட், ஷார்ட்ஸ் உள்பட பல ஜவுளிப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் வங்கதேசம்

இந்திய அரசு வழங்கியுள்ள இறக்குமதி வரி ரத்து உள்ளிட்ட சலுகைகளை பெற்று இந்தியாவிற்கே ஜவுளிப் பொருட்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்து வருகிறது. ஐந்து மாதங்களில் மட்டும் ரூ.2,800 கோடி மதிப்பிலான ஜவுளிப்பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.



இந்தியா: இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக ஜவுளித்தொழில் உள்ளது. நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

குறிப்பாக கிராமப்புற பெண்கள் பலர் ஜவுளித்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் 38 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளிப்பொருட்கள் இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்ற காரணத்தால் வங்கதேசத்திற்கு இந்திய அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அந்நாடு காடா துணி இறக்குமதி செய்ய சலுகை அளித்துள்ளது.

அதே போல் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி விதிக்கப்படாது.

இந்த வரிச்சலுகைகளை பயன்படுத்தி காடா துணியை கொண்டு பல்வேறு ஆயத்த ஆடை ரகங்களை வடிவமைத்து இந்தியாவிற்கே அதிகளவு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது வங்கதேசம்.

இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ஐடிஎப்) கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது.



இந்தியாவிற்கும், வங்கதேசத்துக்கும் உள்ள (சாப்டா) வர்த்தக ஒப்பந்தத்தால், வங்கதேசம் ஆயத்த ஆடைகளை இந்தியாவிற்கு இறக்குமதி வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் ஆயத்த ஆடை உற்பத்தி கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளாக வங்கதேசம் மிகவும் பலப்படுத்தி உள்ளது.

ஆண்டுக்கு 42 பில்லியன் டாலர் மதிப்பிற்கு அதாவது ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பிலான ஜவுளிப் பொருட்களை பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வங்கதேசம் வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித்தொழிலில் உலகளவில் சிறந்து விளங்கும் இந்தியாவை நோக்கியும் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ரூ.2,800 கோடி மதிப்பிலான ஜவுளிப்பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

டீ ஷர்ட், ஷார்ட்ஸ், போன்ற ஜவுளி பொருட்களை, இந்தியாவில் உள்ள பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்கள் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்கின்றன.

கடந்த ஆண்டில், இந்தியாவில் பருத்தி விலை, மற்ற உலக நாடுகளை விட அதிகமாக இருந்ததால், நம்முடைய ஜவுளி பொருட்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவு ஆயத்த ஆடைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி நுகர்வில், தற்போது வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜவுளிப்பொருட்களை ஒப்படுகையில் குறைவாக இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இறக்குமதி மேலும் அதிகரிக்கும்.

ஆயத்த ஆடை உற்பத்திக் கட்டமைப்பை நவீனப்படுத்தி போட்டித்திறனை அதிகப்படுத்தினால் உலக சந்தையில் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் போட்டியை சமாளிக்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...