கோவை டவுன்ஹால் அருகே தீபாவளிக்காக துணி எடுக்க வந்த 17 வயது சிறுவன் குத்தி கொலை….!

நேற்று டவுன்ஹால் பகுதியில் இரு சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த தனியார் ஐ.டி.ஐ கல்வி கூடத்தில் படிக்கும் 17 வயது மாணவன், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் நேற்று இரவு டவுன்ஹால் ராஜவீதி பகுதிக்கு துணி வாங்க வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த தனியார் ஐ.டி.ஐ கல்வி கூடத்தில் படிக்கும் 17 வயது சிறுவனும் அங்கு வந்துள்ளார்.

அவர்களிடையே இருந்த முன் பகை காரணமாக, இருவரும் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு சிறுவனை கழுத்து, முதுகு, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

இதில், சரிந்து விழுந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சிறுவர்களிடையே ஏற்பட்ட தகராறில், 17 வயது சிறுவனின் இந்த கொலை வெறி செயல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...