கோவை சாய்பாபா காலணி அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சாய்பாபா காலணி அருகே வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர் பகுதியில், கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்தே இந்த சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

அதுமட்டுமல்லாது இரவில் வெளியூர் செல்பவர்கள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்புபவர்களும் அவர்களது இலக்காக இருக்கிறது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசாரும் குற்றவாளிகளை கைது செய்து வருவது மட்டுமல்லாமல் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கே.கே.புதூர் சின்னசாமி வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அம்சவேணி (73). இவர் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து வழக்கம் போல் சாய்பாபா காலனி கிருஷ்ணா நகர் சாலையில் நடந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அம்சவேணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக அம்சவேணி சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...