வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி - கோவை தம்பதியினர் கேரளாவில் கைது

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த கோவை தம்பதியினர் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் கைது.


கோவை: கோவையை சேர்ந்த தன்யா மற்றும் கருணாநிதி தம்பதிகள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ.59 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதனால் பணம் இழந்தவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் கொடுக்கபட்ட புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில் அவர்கள் மீது கேரளா எர்ணாகுளம் காவல் நிலையம், மதுரை மாவட்டம், மற்றும் கோவையிலும் அவர்கள் பெயரில் மோசடி வழக்கு நிலுவையில் இருந்தது வந்தது.

மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் படி தனிப்படை அமைத்து இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேறு ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை அழைத்து வந்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...