கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம் எதிரொலி - போலீசார் தீவிர வாகன சோதனை

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்ததில் விவகாரத்தின் எதிரொலியாக கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.



மேலும் வாகனங்களில் வரும் நபர்களின் பெயர் மற்றும் முகவரிகளை பதிவு செய்து சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராக இருந்தாலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...