திருப்பூர் பொங்கலூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து - இருவர் பலியான சோகம்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.


திருப்பூர்: பொங்கலூர் அடுத்த கோயில்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி சின்னராமசாமி(65). இவருக்கு அவினாசிபாளையம் பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் தோட்ட வேலைக்காக கோவில்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான மனோகரன்(60) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து வேலையை முடித்துவிட்டு இருவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனம் திருப்பூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருப்பூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர், இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.



மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சின்னராமசாமி மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.



இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொகுசு கார் ஓட்டுநர் அழகு என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் படுகாயமடைந்த இருவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...