பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தங்கப்பட்டறை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை.


16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தங்கப்பட்டறை வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கெம்பட்டிக்காலனியில் தங்கப்பட்டறை வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 16 வயது சிறுமியுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதை மறைத்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ராஜசேகர் நெருங்கி பழகியுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததையடுத்து, சிறுமியின் வீட்டில் ராஜசேகருடனான பழக்கம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முதலில் மறுத்த ராஜசேகர், பிறகு மருத்துவ பரிசோதனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. 

இதுதொடர்பாக மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையம்  பதிவு செய்த வழக்கு விசாரணை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டப்பட்ட ராஜசேகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இருப்பதால், மத்திய அரசின் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சம், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கில் தண்டனை பெற்ற ராஜசேகர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...