கேரளா சிறையில் உள்ள இலங்கை முகமது அசாருதினை சந்தித்தாரா ஜமேசா முபின்?

2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். கேரள சிறையில் உள்ள இவரை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த ஜமேசா சிறையில் சந்தித்தாரா என்ற கோணத்தில் வருகை பதிவேட்டை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: 2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். இவர் கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் இறந்த ஜமேசா முபின் என்பவர், அசாருதினை கேரள சிறையில் சந்தித்தாரா? என்ற அடிப்படையில், சிறையில் உள்ள வருகை பதிவேட்டில் முபின் கையெழுத்துட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் ஒன்பது தனிப்படையினர் வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை 22 நபர்களை தனிப்படை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில், முகமது தல்கா (25) உக்கடம், முகமது அசாருதீன் (23) உக்கடம், முகமது ரியாஸ் (27) G.M.நகர், ஃபிரோஸ் இஸ்மாயில் (27) G.M.நகர், முகமது நவாஸ் இஸ்மாயில் (26) G.M.நகர் என ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 ல் கைதான முகமது அசாருதினிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பிருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜமேஷாவிற்கு கார் தந்து உதவிய நபர் யார்? அவர் பின்னணி என்ன? அவர் ஏதேனும் அமைப்பில் இருக்கின்றாரா? என்ற தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...