கோவை வெடிவிபத்து சம்பவமாக நடைபெற்ற ஜனநாயக இயக்கங்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றல்

கோவை CPI(M) அலுவலகத்தில் இன்று மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் முன்னிலையில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை வெடி விபத்து காரணமாக நிகழும் அசம்பாவிதங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது.



கோவை: கோட்டை மேடு பகுதியில் வெடி பொருள் மற்றும் சிலிண்டர் கேஸ் வெடிப்பால் ஒரு உயிர் பலியும், வெடி விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை முழுக்க பெரும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் அமைதிக்கு எதிராக பல்வேறு சலசலப்புகள் நிகழ்கின்றன. தேவையற்ற பிரச்சனைகள் அதிகரிப்பதை தவிக்கும், தடுக்கும் விதமாக இன்று கோவை CPI(M) அலுவலகத்தில் இன்று மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் முன்னிலையில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் M. ஆறுமுகம் EX MLA , C.பத்மநாபன் CPI (M) மாவட்ட செயலாளர், C.சிவசாமி CPI மாவட்ட செயலாளர், J.ஜேம்ஸ் CPI மாவட்ட துணைச் செயலாளர், UK.சிவஞானம் CPI (M) மாவட்ட செயற்குழு, ச.தமிழ்செல்வன் பொதுச் செயலாளர் (காங்கிரஸ்), M.அனீஸ் செயலாளர் (காங்கிரஸ்), கு.ராமகிருஷ்ணன் பொதுச்செயலாளர் த.பெ.தி.க, ஜோ.இலக்கியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

23 ம் தேதி கோவையில் நடைபெற்ற வெடிச்சம்பவம் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்துகிறது. தமிழக காவல்துறையின் விரைவான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் எடுத்துவரும் நடவடிக்கைக்களுக்கு இடையூறாக பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்திகளையும் தொடர் பதற்றத்தை ஏற்படுத்துமாறு சில ஊடகங்களின் செய்தி வடிவமைப்பையும் இக்கூட்டம் வன்மையாக் கண்டிக்கிறது.

குற்றம் நடத்தப்பட்ட விதம் கண்டறியப்படுவதற்கும் குற்றவாளிகள் தண்டிக்க படுவதற்கும் இக்கூட்டம் எல்லா வகையிலும் ஆதரவு தருகிறது. ஆனால் அதே நேரத்தில் குற்றத்தோடு அவர்கள் சார்ந்த மதம் இணைக்கப்படுவதை இக்கூட்டம் முழுமையாக நிராகரிக்கிறது.

கோவையின் தொழிலுக்கும் – வியாபாரத்திற்கும், சமூக அமைதியும் வகுப்பு நல்லிணக்கமும் இன்றியமையாதது. என்பதை அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும், என்று கோவை மக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இம்மாதிரியான சம்பவங்கள் ஒரு மதத்திற்கு எதிரானதாக பயன்படுத்தபடுவதை மக்கள் எச்சரிக்கையோடு நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

என ஜனநாயக மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...