பழுதான மலைரயில் என்ஜின் - 4 மணி நேர தாமதத்தால் உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதி

மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர் வரும் நீலகிரி மலைரயில் என்ஜின் பழுது காரணமாக 4 மணிநேர தாமதமானது இதனால் பயணிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.



நீலகிரி: நீலகிரி மலைரயில் மேட்டுபாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணியளவில் குன்னூர் வந்து சேரும். இன்று காலை ரயில் என்ஜின் இரும்பு சட்டம் பழுதானதால் மலைரயில் ஹில்குரோவ் பகுதியில் பாதி வழியில் நின்றது.

என்ஜின் பழுது காரணமாக ஹில்குரோவ் பகுதியில் ரயில் நிற்கும் செய்தி அறிந்து மேட்டுப்பாளையம், குன்னூர் பணிமனையில் இருந்து சென்ற ரயில்வே பணியாளர்கள் சுமார் நான்கு மணி நேரம் பழுது பார்க்கும் பணியினை மேற்கொண்டனர்.



ரயில் பழுதுபார்க்கும் நேரம் பெருமளவில் அதிகரிக்க அதிகரிக்க பயணிகள் பெரும் அளவில் பாதிக்கபட்டனர். உணவு, தண்ணீர் கிடைக்காமல் நான்கு மணி நேரம் ரயில் பயணிகள் கடுமையாக சோர்வடைந்து குன்னூர் வரும் போது காணபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...