கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து 2 மணிநேரம் சிபிசிஐடி விசாரணை

கொடநாடு பங்களா காவலாளி கொலை மற்றும் கொள்ளை என நிகழ்ந்த அனைத்து மர்ம சம்பவங்கள் குறித்து மீண்டும் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையில் காவல் துறையினர் இன்று எஸ்டேட் மேலாளர் உள்ளிட்டோரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.


நீலகிரி: கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு அங்கு சில ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன, இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு காவல்துறை சார்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை தேவை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் தற்போது வரை 316 பேரிடம் விசாரித்துள்ளது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மற்றும் வாகன விபத்தில் இறந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கொடநாடு மேலாளர் நட்ராஜ், சசிகலா, ஜெயா டிவி சிஇஓ விவேக், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழக டிஜிபி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரிக்கப்பட்ட ஆவணங்கள் சீல் வைக்கப்பட்ட கவர்களில் வைத்து நீதிமன்றத்தில் தனிப்படை போலீஸாரால் 10.10.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.



ஆவணங்களின் ஒரு நகல் சிபி சிஐடி - போலீசாரிடம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் சிபிசிஐடி போலீஸார் டிஜிபி தலைமையில் கொடநாடு எஸ்டேட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

எஸ்டேட் மேலாளர் நட்ராஜ் மற்றும் சம்பவம் நடந்த நாளன்று பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது முன்னதாக எஸ்டேட்டிற்கு வந்த அதிகாரிகள் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பின் அனைத்து அதிகாரிகளும் கோவை புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...