ஒண்டிப்புதூர் உண்டு உறைவிட பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை நேரில் ஆய்வு மேற்கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.



அப்பள்ளியின் சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை, எண்ணும் எழுத்தும் திட்ட அறை, கல்வி பயிலும் அறை, கணினி அறை, கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



அதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து மாணவ ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர் மாணவர்கள் பாடத்தை முழுமையாக கவனிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் நடத்தையில் மாற்றம் இருந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.



மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும் எனவும் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன் அடிப்படை கணித திறனை மேம்படுத்தும் இத்திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின் பொழுது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...