வணிக நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவ.7 வரை நீட்டிப்பு - மத்திய நேரடி வரிகள் வாரியம்

வணிக நிறுவனங்கள் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.



டெல்லி: வணிக நிறுவனங்கள் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதியுடன்நிறைவடைகிறது. இந்நிலையில், அதற்கான காலக்கெடுவை நவம்பர்7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வருமான வரி சட்டம் பிரிவு 139-ன் துணைப் பிரிவு(1) இன் கீழ் 2022-23 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த காலக்கெடுவை வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு நிறுவனங்கள் 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

பரிமாற்ற விலை விதிமுறைகளுக்கு உள்பட்ட நிறுவனங்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரி தாக்கல் தொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் இது தொடர்பான சுற்றறிக்கையை www.incomectaxindia.gov.in என்ற வலைத்தள பக்கத்தில் சென்று அறிந்துகொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...